Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வாங்க முடியாத பொருள்

வாங்க முடியாத பொருள்

வாங்க முடியாத பொருள்

வாங்க முடியாத பொருள்

ADDED : ஜூன் 29, 2012 11:06 AM


Google News
Latest Tamil News
* எல்லா வேதங்களையும் கரைத்துக் குடித்திருக்கலாம். புத்திசாலித்தனம் நிறைந்துஇருக்கலாம். ஆனால், மனத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை.

* ஆணவம் நம் கண்களை மறைத்துவிடும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* யாருக்கும் எந்த நன்மையும் செய்யாதவன் பாவகரமான வாழ்க்கை நடத்துகிறான். அவனுடைய வாழ்வு மகிழ்ச்சியற்றதாக மாறிவிடும்.

* நீதிநேர்மை பற்றிப் பேசுவது எளிதான விஷயம். ஆனால், அதைக் கடைபிடிப்பது மிகவும் கடினமானது.

* நல்ல ஆரோக்கியமும், மனவலிமையும் கொண்டவர்கள் தங்களால் இயன்ற சமூகசேவையில் ஈடுபட்டு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

* உலகத்திலேயே விலை உயர்ந்த பொருள் காலம் தான். இதை ஒருவராலும் விலைக்கு வாங்க முடியாது.

* கல்வி அறிவு மட்டும் ஒருவனுக்கு பயன்படாது. அனுபவ அறிவும் சேர்ந்தால் தான் கல்வியின் முழுப்பயனை நாம் அடைய முடியும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us